கொங்கு தமிழக வரலாறு
கொங்கு தமிழக வரலாறு, கா.அப்பாதுரையார், ஜீவா பதிப்பகம், விலை 180ரூ.
கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்ட கொங்கு மண்டலம் என்பது, பழங்காலந்தொட்டு மிகச் சிறப்புடன் விளங்கியது என்பதை, ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
ஆதிகாலம் முதல் சங்க காலத்தின் இறுதியான கி.பி. 240 முடிய கொங்கு மண்டலம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது? அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், பல நாடுகளுடன் நடைபெற்ற வாணிபம், படையெடுப்புகள், மன்னர்களின் ஆட்சி முறை என்று பலதரப்பட்ட விஷயங்களை பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையால் பல சான்றுகளுடன் தந்து இருக்கிறார்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகளின் அடியிலும், சால்டியரின் ஊர் என்ற பண்டைய நகரிலும் கொங்கு நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தேக்கு, எக்கு ஆகியவை பயன்படுத்தப்பட்டன என்பது போன்ற வியத்தகு தகவல்களையும் ஆசிரியர் தந்து இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் இருந்து அரிசி, சர்க்கரை ஆகியவை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று கூறும் ஆசிரியர், பன்னாட்டுகளுடன் நடந்த வாணிபத்துக்கு சான்றாதாரங்களையும் தெரிவிக்கிறார்.
இது போன்ற பல செய்திகளால், பழங்கால கொங்கு மண்டலத்தின் சிறந்த ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000010781.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818