சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்
சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், விலை 110ரூ.
அரசு அலுவலர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, எந்த விதமான வருமானத்திற்கு வரி உண்டு? எந்த வருமானத்திற்கு வரியில் இருந்து சலுகை உண்டு என்பது தெரியாமல் அவதிப்படுவது உண்டு. இது போன்றவர்களுக்கெல்லாம் அருமருந்தாக் இந்த நூல் விளங்குகிறது.
பொதுவாக வருமான வரி தொடர்பான நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகும் என்ற நிலையை மாற்றி, எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூலை ஆக்கிய இருப்பது பாராட்டுக்கு உரியது.
வருமான வரி தொடர்பான அத்தனை ஐயப்பாடுகளுக்கும் விடை தரும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு தகவலையும் அதற்கு உரிய எடுத்துக்காட் கணக்குகளுடன் தந்து இருப்பதால் அவற்றை எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.
வீடு, நிலம், நகை ஆகியவற்றை விற்கும் வகையில் கிடைக்கும் வருமானம், அதற்கு உரிய வரி என்ன என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட இந்த நூல் சம்பளதாரர்களுக்கு நல்ல கையேடாக விளங்கும்.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027079.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818