இயேசு அந்தாதி
இயேசு அந்தாதி, மா.அய்யாத்துரை, டாக்டர் மா. அய்யாத்துரை செல்லத்தாய் அறக்கட்டளை, விலை 90ரூ.
தமிழ் மொழியில் அந்தாதி இலக்கியங்கள் 270 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதன் முறையாக இயேசுநாதர் மீது அந்தாதிப் பாடல்களைப் பாடும் இலக்கியமாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இயேசுநாதரின் வாழ்க்கை வரலாறு 100 பாடல்களில் தரப்பட்டு இருக்கிறது.
இந்த பாடல்கள் அனைத்திலும் எளிய சொற்களையே பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு பாடலுக்கும் கீழே அதன் விளக்கமும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சுலபமாகப் படிக்க முடிகிறது. கவிதை இலக்கியத்துக்கு உரிய எதுகை, மோனை, இயைபு, உவமை, உருவகம், அணி போன்ற அத்தனை அணிகலன்களையும் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818