வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும்
வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும், வ.ஞானப்பிரகாசம், அருள்வடிவேலன் பதிப்பகம், விலை 100ரூ.
வள்ளற்பெருமான் என்னும் ராமலிங்க அடிகளாரும், கிருபானந்தவாரியாரும் தமிழகத்தின் தவப்புதல்வர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்ற தகவலை இந்த தகவலை இந்த நூல் தெளிவாகத் தருகிறது. வள்ளற்பெருமானுக்கும் வாரியார் சுவாமிகளுக்கும் இடையே இவ்வளவு ஒற்றுமையான கருத்துகள் இருந்தனவா என்று வியக்கும் வகையில் அவர்கள் இருவர் பற்றிய பல செய்திகளைத் தொகுத்துத் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
ராமலிங்க அடிகளார் மற்றும் கிருபானந்த வாரியார் பற்றி தனித் தனிக் கட்டுரைகளாக எழுதாமல், அவர்கள் இருவரின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு, அவற்றை அடுத்தடுத்த பாராக்களில் தொடர்ச்சியாகத் தந்து இருப்பதால், அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க முடிகிறது.
புலால் மறுத்தல் என்பது உள்பட பல்வேறு கொள்கைகளில் இவர்கள் இருவரும் எவ்வாறு ஒருமித்து இருந்தார்கள் என்பதை இந்தத் தொகுதி நன்றாக எடுத்துக்காட்டி இருக்கிறது. இந்த நூல் மூலம் வள்ளற் பெருமாள் மற்றும் வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒருமித்த கொள்கைகளை இந்த நூல் சிறப்பாக ஆவணப்படுத்தி இருப்பது பாராட்டுக்கு உரியது.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818