கூடு விட்டு கூடு பாயும் வித்தை
கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ.
பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள், திருமந்திரம் உணர்த்தும் யோக நெறிகள், திருமூலர் கூறும் யோகங்கள், சித்த மார்க்கமும், தேவ ரகசியமும் ஆகியவை பற்றி விரிவாக எடுத்து உரைக்கப்பட்டு உள்ளது.
நன்றி: தினத்தந்தி, 21/11/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818