குளிரும் தேசத்துக் கம்பளிகள்

குளிரும் தேசத்துக் கம்பளிகள், சதீஸ் செல்வராஜ், நெம்புகோல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.200.

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை, போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அடிமைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் விவரிக்கிறது.

உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றங்களினால், வணிகத்துக்காகவும், மூலப் பொருள்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் போர்த்துக்கீசியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள் செய்த முயற்சிகளின் விளைவாக பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அங்கு ஏற்கெனவே வாழ்ந்த மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்.

தமிழகத்திலும் ஐரோப்பிய நாட்டினர் புகுந்து இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்களின் ஆட்சியை அழித்து, அவர்களுடைய நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றி மக்களை அடிமைப்படுத்தியதை இந்நூல் விவரிக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷார் தங்களுடைய நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக, சந்தைக்காக இங்குள்ள வேளாண்மையைச் சீரழித்ததும், நீர்ப்பாசனத்தைக் கவனிக்காமல் விட்டதும், செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி, பட்டினியால் பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதும் கூறப்படுகிறது.

தங்களுடைய சந்தைத் தேவைக்காக பிரிட்டிஷார் பருத்தியை விளைவித்தது, தேயிலைத் தோட்டங்களை அமைத்ததும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

பிழைப்பதற்கு வழியின்றித் தவித்த மக்களை இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் சென்று, பனியிலும் குளிரிலும் துன்பப்பட வைத்து, அவர்களுக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் இருந்தது; நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த போதிலும் குடியுரிமை தராமல் காலம் தாழ்த்தியது; இவற்றை எதிர்த்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்ஆகியவற்றை விளக்கும் இந்நூல், இன வேறுபாடின்றி, பாட்டாளி வர்க்கமாக இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.


நன்றி: தினமணி, 3/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.