குந்தியின் குருசேத்திரம்
குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார், பக். 352, விலை 275ரூ.
குந்தியின் தந்தை பெயர் சூரசேனன், சகோதரன் வசுதேவன். கிருஷ்ணனும், பலராமனும் அண்ணன் மகன்கள். குந்தியின் தந்தை சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவனிடம் வளர்ப்பு மகளாக வளர்ந்ததால், இவள் குந்தி எனப் பெயர் பெற்றாள்.
பிறந்தது ஓர் இடம்; வளர்ந்தது வேறிடம். இல்லற வாழ்க்கையில் ஈடுபட இயலாத பாண்டுவை கணவனாகக் கொண்டாள். அரண்மனை வாழ்க்கையாவது கிடைக்குமா என்றால், அதுவும் கிடைக்கவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வனத்திற்குப் போய் விட்டான் பாண்டு.
மந்திரத்தின் உதவியால் ஐந்து மகன்களைப் பெற்றாள். அந்த மகன்களுக்கு அரண்மனை வாழ்க்கை வேண்டும் என்று தொடர்ந்து போராடினாள். இறுதியில் கர்ணனைத் தன் மகன் என குந்தி அறிமுகம் செய்தது வரை, குந்தியின் வாழ்க்கை போர்க்களமாகவே அமைந்துள்ளது. எனவே தான் விஜயராஜ், இந்த நாவலுக்கு குந்தியின் குருசேத்திரம் எனப் பெயரிட்டுள்ளார்.
பெரிய எழுத்து ராமாயணம், பெரிய எழுத்து மகாபாரதம் என்னும் பெயரில் எளிய மொழியில் உரை நடையில் ராமாயணமும், மகாபாரதமும் ஒரு காலத்தில் விற்கப்பட்டது.
அதைப் போல் இந்த நுால், பெரிய எழுத்துகளில் எளிய மொழி நடையில் தரமான வடிவமைப்பில், அனைவருக்கும் மகாபாரதத்தையும், அதில் குந்தி தொடர்பான நுட்பங்களையும் வழங்குகிறது.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர்,24/3/19,
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026630.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818