லா.ச.ரா.
லா.ச.ரா., லா.ச.ரா. சப்தரிஷி, சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50.
தமிழ் இலக்கியவுலகில், கதையோ கட்டுரையோ ஒரு வரியைப் படித்தவுடன் “இது இவர் எழுதியதுதானே’ என்று கேட்கும்படியான தனித்துவமிக்க எழுத்து நடை அமையப்பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் லா.ச.ரா. என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்.
ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து சிறுகதை, புதினம், கட்டுரை என்று தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த எழுத்தாளர் இவராகத்தான் இருப்பார். லா.ச.ரா.வின் சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், அவற்றில் காணப்படும் வார்த்தை ஜாலங்கள், தத்துவமொழிகள் இவற்றையெல்லாம் தனித்தனிக் கட்டுரைகளில் அலசி ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
இவருடைய அனைத்துக் கதைகளுமே குடும்பத்தை மையப்படுத்திய கதைகளே. வேறு விதமான கதைகளை இவர் எழுதிப் பார்க்கவே இல்லை. குடும்ப அமைப்பின் மீது இவருக்கு அலாதி ஈடுபாடு இருந்திருப்பது புரிகிறது.
இவருடைய எழுத்துகள் எளிமையானவை அல்ல, ஆனால் ஆழமானவை. ஒருமுறைக்கிருமுறை படிக்கும்போதே அவற்றின் உண்மைப்பொருளை நாம் உணர்ந்து ரசிக்க முடியும் (மனம் விட்டு ஒருவருக்கொருவர் எண்ணியதாய் எண்ணிக்கொண்ட எண்ணங்களை எண்ணி எண்ணி நினைவின் சுவடுகளில் நினைவைப் பொருத்தி வைத்துப் பார்த்துக் கொள்வது தவிர வேறென்ன செய்ய முடிகிறது?).
ஆனால், இவர் சாதாரண மனிதர்களின் உரையாடல்களில் இடம்பெறும் சொற்றொடர்களை மிகவும் கூர்ந்து பார்த்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது (தோசைய திருப்பிப் போடலாம், இட்லிய திருப்பிப் போட முடியாது – இவ்வளவு அழகான உபமானத்தை நான் எழுத்தில் கொண்டு வர எத்தனை நாள் தேவையாயிருக்குமோ?).
சிறந்த எழுத்தாளரைப் பற்றிய சிறப்பான நூல். எழுத்தாளரின் புதல்வரே எழுதியிருப்பதால் நம்பகத்தன்மை கூடுவதில் வியப்பில்லை.
நன்றி: தினமணி, 10/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818