மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள்
மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள், கோபால் மாரிமுத்து, பக்.395, விலை ரூ.169.
ஆப்ரஹாம் லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர்கிங், உட்ரோ வில்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், நேரு, ஜான் கென்னடி, பராக் ஒபாமா உள்ளிட்ட 37 தலைவர்கள், அறிஞர்களின் குறிப்பிடத்தக்க சொற்பொழிவுகளின் ஆங்கில மூலமும், அவற்றின் தமிழாக்கமும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், நூலைப் படிப்பவரின் அறிவும், பார்வையும் விரிவடையும் வாய்ப்புள்ளது.
நிறவெறி ஒழிய “”கண்ணியமான ஒழுக்கமான போராட்டத்தை நடத்த வேண்டும்” என்று மார்ட்டின் லூதர்கிங் பேசியது, “”இங்கிருக்கும் சட்டம் அயல்நாட்டு சுரண்டலுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கிறது. சுரண்டலுக்குத் துணை போகிறது” என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் 1922ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வாதாடியது, “”மகிழ்ச்சி தந்த சுதந்திரம் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. அதிகாரத்தைத் தந்த சுதந்திரம் கடமையையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது” என்று இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பாராளுமன்றத்தில் நேரு பேசியது, தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது நெல்சன் மண்டேலா, “”அரசியல் விடுதலையைக் கண்டுவிட்டோம். வறுமை, சாப்பாட்டுக்கு வழியில்லாமை என்ற அனைத்திலிருந்தும் வெளிவர இன்று உறுதி எடுத்துக் கொள்வோம்” என்று உரையாற்றியது போன்ற மிக முக்கியமான சொற்பொழிவுகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நூல்.