மகாபாரதம்
மகாபாரதம், பதிப்பாசிரியர் அனந்த் பய், விளக்கம் திலிப் கதம், வெளியீடு அமர் சித்ர கதா, மூன்று தொகுதிகளும் சேர்த்து 2199ரூ.
அமர் சித்ர கதை என்ற தலைப்பில் வெளியாகும் அனைத்து சித்திரக் கதைகளும், சிறுவர்களையும் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்பது, மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாபாரதப் புத்தகத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
வியாசர் அருளிய மகாபாரதக் கதை எவ்வாறு, எந்த சமயத்தில் சொல்லப்பட்டது என்பது முதல் தொடங்கி இந்த இதிகாசத்தின் இறுதிப் பாகம் வரை உள்ள அனைத்து முக்கிய சம்பவங்களும் அழகாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. மகாபாரதக் கதையில் இடம்பெற்று இருக்கும் அனைத்துக் காட்சிகளையும் விவரிக்கும் உயிரோட்டமான வண்ணப்படங்களும் தெளிவான தமிழ வசனங்களும், புத்தகத்தைக் கையில் எடுத்தால் தொடர்ந்து படித்து முடிக்கும் வகையில் சிறப்பாக அமைந்து இருக்கின்றன.
மகாபாரதக் கதையையும் அதன் அருமை பெருமைகளையும், வளரும் சமுதாயத்திற்கு இந்த படக்கதைப் புத்தகங்கள் எளிய முறையில், ருசிகரமாகக் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818