மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி, இராம்பொன்னு, சர்வோதய இலக்கிய பபண்ணை, விலை 200ரூ.
சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு
மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை சுய சரிதையாக தானே கூறி இருந்தாலும், அதில் இல்லாத தகவலான பகத் சிங்கை காப்பாற்ற காந்தியடிகள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் சான்றாதாரங்கள் போன்றவற்றைத் தருவதன் மூலம் இந்த நூல் வித்தியாசமாக உள்ளது.
தீண்டாமை ஒழிப்பு, சமயநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி காந்தியடிகள் ஆற்றிய அரும்பணிகளை அழகாகவும் சரளமாகவும் தந்து இருப்பதால் அவற்றை இளைஞர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் பொன் மொழிகள், நூலின் இறுதிப் பகுதியில் காலவரிசை எனும் தலைப்பில் தந்துள்ள மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் குறிப்பு, இடையிடையே காணப்படும் அரிய புகைப்படங்கள் ஆகியவை வரவேற்கத் தக்கவையாக உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 24/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818