மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு, மணிமேகலை பிரசுரம், விலை 150ரூ.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் எம்.ஜி.ஆரின் பிறப்பு, வளர்ப்பு, பள்ளி வாழ்க்கை, வறுமையால் படிப்பை கைவிட்டு நாடகத்தில் சேர்ந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டது. பின்னர் அவரின் திரையுலக பிரவேசம், திருமண வாழ்க்கை, அண்ணாவுடன் நட்பு, புதிய கட்சி தொடங்கியது, முதல் அமைச்சரானது, மறைவு உள்ளிட்டவை விரிவாக கூறப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் படிப்படியாகவும், சுவைபடவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிறு வயதில் பட்ட கஷ்டங்களை பற்றி அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் கூறும்போது, “என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தற்போது வரை போராட்டமாகவே இருக்கிறது” என்று தெரிவித்தார். அந்த போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை என்பதை ஆசிரியர் குழு தெளிவாக கூறியுள்ளது.
நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818