மரக்கலம்
மரக்கலம், ஸ்ரீமொழி வெங்கடேஷ், ஓவியம் காணிக்கைராஜ், ஸ்ரீமொழி பப்ளிகேஷன், விலை 200ரூ.
வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டை துறை முகத்தில் கால் வைத்த நாளே, இந்திய மண்ணின் மீதான ஆதிக்கத்தின் துவக்கம் என தெளிவுபடுத்துகிறது இந்நூல்.
போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மண்ணை கைக்கொள்ள சுமார் 102 ஆண்டுகள் போராடி, கள்ளிக்கோட்டை மக்களை முழுமையாய் வெல்ல முடியாமல் கோவாவை தங்கள் ஆதிக்கத்திற்கு நிலை நிறுத்திக்கொண்டு நாடு திரும்பியவர்கள். இவர்களுக்கு பின்புதான் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்க வரலாற்றை துவக்குகிறது.
அந்நியர்களுக்கு எதிரான கள்ளிக்கோட்டை மன்னர் மானவர்மர் சாமுத்திரியின் வலுவான எதிர்ப்பின் கூர்மை 100 ஆண்டுகளில் மழுங்கிப் போனதை ‘மரக்கலம்’ என்னும் வரலாற்று நாவல் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக வரலாற்றுப் பக்கங்களில் கணிசமாக குறிப்பிடப்படாத போர்ச்சுக்கீசியர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த குஞ்சாலிமார்களின் வீரத்தையும், தீரத்தையும், தியாகத்தையும் மையப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்ரீமொழி வெங்கடேஷ்.
திரைக்கடலில் நடக்கும் போர்க்காட்சிகளை நம் மனத்திரையில் ஓடவிடுகிறார் ஆசிரியர். அதற்கு ஓவியம் மூலம் உயிர் கொடுக்கிறார் காணிக்கைராஜ்.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.