மறுதாம்பு
மறுதாம்பு, தோழன் மபா., மேய்ச்சல் நிலம் பதிப்பகம், பக். 104, விலை 90ரூ.
வெட்டப்பட்ட பின்னரும் துளிர்விடும் எந்த ஒன்றும் ‘மறுதாம்பு’தான். ‘சாமிதானே நானு என்னை ஏன்டா சமுத்திரத்தில் கரைக்கிற?’ என்று கேட்டும் சாமிக்கும் ஒரு ‘மறுதாம்பு’ உண்டு என்பதை உணர்த்தும் சமூகப்பதிவுகள் மபாவின் ஆக்கங்கள். விளிம்பு நிலை மாந்தர் மட்டுமன்று, பெரும் வலியை தினந்தோறும சுமந்து நகரும் நாட்களும் கால்களும்கூட தனக்கான செய்தியை கவிதைகளாகப் பதிந்துவிட்டுச் செல்லும் நிகழ்வு இதில் உண்டு.
நன்றி: குமுதம், 5/4/017.