மின்னல் பூக்கள்,
மின்னல் பூக்கள், எஸ். ஆழிவண்ணன், வெண்பா யாழினி பதிப்பகம், விலை 180ரூ.
மரபு கவிதைகளின் தொகுப்பு. சமூக அக்கறையுடன் எழுதப்பட்டு உள்ளது. வேண்டாம் வரதட்சணை, ஒன்றே குலம், சாலியிலே சங்கடங்கள், நலனைக் கெடுக்கின்ற நாகரிகங்கள், ஓ காதலர்காள் உள்ளிட்ட ஏராளமான கவிதைகள் சிந்தனையை தூண்டுகின்றன. எதுகை மோனையை நயமாக பயன்படுத்தி கவிதைகளுக்கு மெருகேற்றி இருக்கிறார் நூலாசிரியர்.‘
நன்றி: தினத்தந்தி, 21/12/2016.
—-
கல்லைக்குறிச்சி கோட்ட நடுகற்கள் வரலாறு, சித்திரைச் செல்வி பதிப்பகம்.
கள்ளக்குறிச்சி என்று அழைக்கப்படும் கல்லைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கல்வராயன் மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுர்கம்,சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் காணப்பட்ட நடுகற்கள் குறித்து எஸ்.கே.மணி எழுதிய ஆய்வு நூல். அரிய படங்கள். ஆசிரியரின் கடின உழைப்பின் வெளிப்பாடே இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 21/12/2016.