மின்னல் பூக்கள்,

மின்னல் பூக்கள், எஸ். ஆழிவண்ணன், வெண்பா யாழினி பதிப்பகம், விலை 180ரூ. மரபு கவிதைகளின் தொகுப்பு. சமூக அக்கறையுடன் எழுதப்பட்டு உள்ளது. வேண்டாம் வரதட்சணை, ஒன்றே குலம், சாலியிலே சங்கடங்கள், நலனைக் கெடுக்கின்ற நாகரிகங்கள், ஓ காதலர்காள் உள்ளிட்ட ஏராளமான கவிதைகள் சிந்தனையை தூண்டுகின்றன. எதுகை மோனையை நயமாக பயன்படுத்தி கவிதைகளுக்கு மெருகேற்றி இருக்கிறார் நூலாசிரியர்.‘ நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   கல்லைக்குறிச்சி கோட்ட நடுகற்கள் வரலாறு, சித்திரைச் செல்வி பதிப்பகம். கள்ளக்குறிச்சி என்று அழைக்கப்படும் கல்லைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கல்வராயன் […]

Read more

இளவேனில் கட்டுரைகள்

இளவேனில் கட்டுரைகள், கார்க்கி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. எழுத்தாளர் இளவேனில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு, இளவேனில் எழுத்தில் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இளவேனில் எழுத்தில் ஆர்ப்பரிக்கும் அருவியையும், அமைதியான நதியையும் காணலாம். பாட்டாளிகளுக்காக பரிந்து பேசுவதையும், ஏழைகளுக்காக வரிந்து கட்டுவதையும் பார்க்கலாம். சமூகக் கொடுமைகளைச் சாடுகிறார். பொதுவுடைமை கருத்துகளுக்குப் பொலிவு தேடுகிறார். நன்றி: தினத்தந்தி, 20/7/2014.   —-   பெண்கள் திலகம் பாத்திமா, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 35ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் […]

Read more

புதியதேசம்

புதியதேசம், ப. திருமலை, புதிய தரிசனம், சென்னை. சமூகப் பார்வை சமூகப் பிரச்னைகளைத் தேடிப்பிடித்து அதற்காக அலைந்து, திரிந்து தகவல்களைத் திரட்டி, அவற்றைச் சரிபார்த்து வழங்குவதே ஒரு செய்தியாளனின் முக்கியக் கடமை. அவ்வகையில் ப. திருமலை தன் பல்லாண்டு செய்தி உலக அனுபவத்தில் வழங்கி இருப்பதே புதிய தேசம் என்ற இந்நூல். இந்தியாவில் நீர் வழிச்சாலை தேவை, தமிழகத்தில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றிய ஆழமான கட்டுரை, சீமைக் கருவேல மரத்தினால் காலியாகும் கிராமங்கள், காவல்நிலைய மரணங்கள், தமிழர்களின் தற்கொலை மனஙப்பான்மை, கருக்கொலை, குழந்தை […]

Read more