மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.
மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்., ஜி.விசுவநாதன், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், விலை 150ரூ.
விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன், மக்கள் போற்றும் தலைவரான எம்.ஜி.ஆரின் வரலாறு, அவருடன் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என பல்வேறு விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கியபோது, அவரை மலையாளி என்று வர்ணித்தார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு எம்.ஜி.ஆர்., “யார் தமிழர் என்பதற்கு நீங்களே விளக்கம் சொல்லுங்கள். தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூராரின் தாய்மொழி தெலுங்கு, ஆனால் அவர் தமிழ் மீது வைத்திருந்த பற்றினை நாடே அறியும். முதல்வராக இருந்த குமாரசாமி ராஜாவும் தமிழரில்லை. ஆனால் தமிழின உணர்வோடு இருந்தார்.
பலகாலம் முன் பர்மா சென்று இப்போது திரும்பி வரும் தமிழர்கள், பர்மிய மொழி பேசினாலும் அவர்கள் தமிழர்கள் என்கிறோம். சேலம், கோவையில் உள்ள சில வகுப்பினர், வீட்டில் இருக்கும்போது கன்னடத்தில்தான் பேசுவார்கள். அதனால் அவர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? தமிழ் உணர்வு யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லோருமோ தமிழர்கள்தான் என்று பொட்டில் அடித்தாற்போல் பேசினார். தமிழக மக்கள் அவரைத் தமிழராகவே ஏற்றுக்கொண்டாடினார்கள்.
எம்.ஜி.ஆர்., எனும் மூன்றெழுத்து மக்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்த அதிசயம் நிகழ்ந்த விதத்தின் அற்புதமான தொகுப்பு.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம் 2/5/2018.