முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில் அருமை செல்வம், அசதா, காலச்சுவடு பதிப்பகம், பக். 96, விலை 100ரூ.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

இந்நாவல் சந்தியாகோ நாஸார் என்பவனின் கொலையுடன் தொடங்குகிறது. அக் கொலையுடனேயே நிறைவும் பெறுகிறது. இடையில் அவன் கொல்லப்படுவதற்கான காரணத்தை நாவல் விரட்டிச் செல்கிறது.

பயார்தோ சான் ரோமான் என்பவரின் புது மனைவி ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு சந்தியாகோ நாஸார்தான் காரணம்; அதனால்தான் அவன் கொல்லப்பட்டான் என்பதாக நினைத்து நாவலை வாசிப்பவர்கள், அத்தகைய நிகழ்வு எதுவும் நாவலில் நிகழாததால் ஏமாற்றமடைவார்கள்.

சந்தியாகோ நாஸார் கொலை செய்யப்படுவது, மிகவும் நல்லவர்களாக இருந்த இரட்டையர்களான பெத்ரோ விகாரியோ சகோதரர்கள் கொலைகாரர்களாக மாறுவது எல்லாம் ஏற்கெனவே “விதி வழி‘’ தீர்மானிக்கப்பட்டவையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

நாவல் நிகழும் காலத்தின் மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள், ஆண்- பெண் உறவு, மதநம்பிக்கைகள், சட்டம், நீதியென அனைத்தும் நிஜவாழ்வின் நிகழ்வுகளாக நம் கண்முன் தெரிகின்றன. மொழிபெயர்ப்பு என்பதை உணர முடியாத இயல்பான தமிழ்நடை வியப்பளிக்கிறது.

நன்றி: தினமணி, 23/1/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *