முதல் மனித வெடிகுண்டு

முதல் மனித வெடிகுண்டு, பி. சந்திரசேகரன், குமுதம் பு(து)த்தகம், விலை 580ரூ.

மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியை ஒரு பெண் கொலை செய்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.

இது தொடர்பான வழக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு அதிக பரபரப்புக்குள்ளான வழக்காகும். அப்படிப்பட்ட வழக்கில், பிரபல தடவியல் நிபுணரான பி. சந்திரசேகரன், அறிவியல் ரீதியாக, தடயவியல் முறைப்படி துப்பு துலக்கி உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதை சுற்றிப் பின்னப்பட்ட பின்னணிப் புதிர்களையும் ஒரு நாவல்போல் ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல் இப்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் பதிப்பின் சாரமும், நுட்பமும் சற்றும் குறையாதபடி ராஜசியாமளா மொழிபெயர்த்துள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரை சொல்லப்படாத பல தகவல்களைப் படங்களுடன் ஆதாரபூர்வமாக அலசி இருப்பதை நூல் முழுக்கக் காணலாம்.

நன்றி: தினத்தந்தி, 8/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *