நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும்

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும், கீ.வீரமணி, வெளியீடு திராவிடர் கழகம், விலை 70ரூ.

நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும், 90ஆம் ஆண்டு காணும் சுயமரியாதை இயக்கமும் சாதித்து என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றதால் பிராமணர்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த முத்தையா முதலியாரால் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டதே வகுப்புவாரி உரிமைச்சட்டம். அதன் பரிணாம வளர்ச்சியே தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பதை ஆதாரத்துடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி, 8/6/2016.

 

—-

முகில்(அரசுப் போட்டித் தேர்வுக்குரிய தமிழ் இலக்கிய இலக்கண வினா விடைகள்), ந. லெனின், பிருந்தா பதிப்பகம், விலை 100ரூ.

அரசுப் பணியாளர்த் தேர்வுக்குச் செல்ல இருப்பவர்களுக்கு, பயனளிக்கும் வகையில் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ள வினா விடை நூல். தமிழ் நூல்களின் ஆசிரியர்கள் விவரங்கள் இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

நன்றி: தினத்தந்தி, 8/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *