சிந்தனையின் சிற்பங்கள்
சிந்தனையின் சிற்பங்கள், கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம், பூம்புகார் பதிப்பகம், விலை 80ரூ.
சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை, கவிதைகளாக வடித்துத் தந்துள்ளார் கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம். அந்தக் கவிதைகள், அழகிய சிற்பங்கள் போல நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 கவிதைகள், “இனப்பற்றும், மொழிப்பற்றும், இந்நாட்டுப் பற்றும் விட்டு, இளைஞர் எல்லாம் வெளிநாட்டில் இடர்ப்படுதல் யார் குற்றம்?” என்று கேட்டு, தம் சிந்தனையைத் தூண்டுகிறார். கவிதைகள் உண்மையில் அழகிய சிற்பங்கள்தான். இந்த நூலில், ஆசிரியரின் 4 சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, “பள்ளிப்படைச் செப்பேடு” என்ற சிறுகதை, ராஜேந்திரசோழன் காலத்துக்கே நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.
—-
புத்தர் காப்பியம், முருகுதுரை, கவிதா வெளியீடு, முதல் பாகம் 160ரூ, இரண்டாம் பாகம் 200ரூ.
இயேசு கிறிஸ்துவுக்கு 563 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர், புத்தர். மக்களுக்கு தொண்டாற்ற அரசு வாழ்வைத் துறந்து துறவியானார். உயிர்ப்பலியை எதிர்த்தார். அகிம்சையை போதித்தார். சாதி வேற்றுமை பார்க்காதீர் என்று உபதேசித்தார். அப்படிப்பட்ட புத்த பிரானின் வரலாற்றை, மரபுக்கவிதை வடிவில் காவியமாகத் தீட்டியுள்ளார் முருகுதுரை.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.