நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்,  செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.244, விவை ரூ.200.

தமிழறிஞர்கள் சிலரின் தமிழ்ப் பணியைப் பற்றிய ஆய்வு இந்நூல். அவர்களின் ஒட்டுமொத்த தமிழ்ப் பணியின் மையப் புள்ளியைக் கண்டறியும் முயற்சி.

உதாரணமாக, "கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம், மொழியியலில் வரலாற்று ஒப்பிலக்கணம் என்ற துறையைச் சேர்ந்தது' என்ற நூலாசிரியரின் வரையறுப்பு, ‘தமிழ் உலகில் மொழியுணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில், அறிவு வழிப்பட்ட விஞ்ஞானரீதியான கருத்துகள் பரவுவதற்கு பாடுபட்டவர் 39’ என்ற அடிப்படையில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரை நூலாசிரியர் ஆய்வு செய்திருப்பது, ‘இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தமிழரெல்லாம் இன ஒருமைப்பாடு எய்தும் வாய்ப்பு இருப்பதாக 39’  ம.பொ.சி. கருதியதாலேயே, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும் தொகுத்துத் தரும் பணியில் ம.பொ.சி. ஈடுபட்டார் என்று அவருடைய தமிழ் இலக்கிய ஆய்வுகளில் இருந்து இந்நூலாசிரியர் வந்தடைந்த முடிவு, ‘இலக்கிய ஆய்வைப் பொறுத்தவரையில் ஐந்து அணுகுமுறைகள் உள்ளன. வரலாற்று நோக்கு, சமூகநோக்கு, இலக்கிய நோக்கு; மொழிநோக்கு, உலகளாவிய நிலையில் ஒப்பு நோக்கு, அதற்கு ஆழ்ந்த அடித்தளம் இட்டவர் தனிநாயக அடிகள் 39 என்ற நூலாசிரியரின் கூற்று ஆகியவற்றைக் கூறலாம்.

உ.வே.சா, குறுந்தொகையைப் பதிப்பித்தது, கா.சிவத்தம்பியின் சமூகவியல் கருத்தமைவுகள் மொழியியலில் தாக்கம் ஏற்படுத்தியது, மொழிப்பற்றை மக்களுக்கு ஏற்படுத்தும்விதமாக மு.வ., இலக்கியத்தை எளிமைப்படுத்தியது என நூலாசிரியரின் தெளிவான பார்வை நூல் முழுவதும் ஒளிர்கிறது.

நன்றி: தினமணி: 15/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *