குயில்பாட்டுத் திறன்

குயில்பாட்டுத் திறன், செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.280, விலை ரூ.260. ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு பலவிதமான கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்நூல் பாரதியாரின் “குயில் பாட்டு’ படைப்பை மொழியியல் இலக்கியத்திறனாய்வு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேலை நாடுகளில் தோன்றிய திறனாய்வு முறைதான் மொழியியல் இலக்கியத் திறனாய்வு. முதலில் இலக்கியத்தின் நடை தொடர்பாக ஆராய்ந்த திறனாய்வு, இலக்கியத்தில் காணப்படும் மொழி அமைப்பு முழுவதையும் ஆராயும் மொழியியல் திறனாய்வாக மாறியது. “மொழியின் அமைப்புதான் இலக்கியத்திற்கு வடிவ அழகைத் […]

Read more

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள், செ.வை. சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 235, விலை 200ரூ. தமிழ் அறிஞர்கள் என்று குறிப்பிடத்தக்க பதினான்கு அறிஞர்களைக் குறித்த வரலாற்றுப் பதிவாக இந்நுால் திகழ்கிறது. இவர்கள் அனைவரும், 19, 20ம் நுாற்றாண்டுகளில் தமிழ்க் கல்வி வரலாற்றிலும், ஆய்வு வரலாற்றிலும் சிறப்புற்று விளங்கியவர்கள். இவர்களுள் கால்டுவெல், உ.வே.சா., ஆகிய இருவரையும் இந்நுால் ஆசிரியர் நேரில் காணவில்லை. எனினும், அவர்கள் இந்நுாற்றாண்டில் இன்றியமையா சாதனைகளை நிகழ்த்தியவர்கள் என்பதால், அவர்களையும் இணைத்தே இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது. கால்டுவெல் வரலாற்று ஒப்பிலக்கணம் […]

Read more

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்,  செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.244, விவை ரூ.200. தமிழறிஞர்கள் சிலரின் தமிழ்ப் பணியைப் பற்றிய ஆய்வு இந்நூல். அவர்களின் ஒட்டுமொத்த தமிழ்ப் பணியின் மையப் புள்ளியைக் கண்டறியும் முயற்சி. உதாரணமாக, "கால்டுவெல் திராவிட மொழி ஒப்பிலக்கணம், மொழியியலில் வரலாற்று ஒப்பிலக்கணம் என்ற துறையைச் சேர்ந்தது' என்ற நூலாசிரியரின் வரையறுப்பு, ‘தமிழ் உலகில் மொழியுணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில், அறிவு வழிப்பட்ட விஞ்ஞானரீதியான கருத்துகள் பரவுவதற்கு பாடுபட்டவர் 39’ என்ற அடிப்படையில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரை […]

Read more