நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்.
நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்., கமலா கந்தசாமி, தமிழன் குழுமம், விலை 200ரூ.
‘குன்றனைய பொருள் சேர்த்துக் கொடுத்து புகழ் வளர்த்தோன்’
என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப் பெற்ற எம்.ஜி.ஆரைப் பற்றிய இந்த நூல், அவரது வாழ்க்கை, சினிமா, அரசியல், கொடை உள்ளத்தை படம்பிடித்து காட்டி உள்ளது. குறிப்பாக அவர் யார், யாருக்கெல்லாம் குறிப்பறிந்து உதவி செய்து இருக்கிறார் என அறிகிறபோது வியப்பாக இருக்கிறது.
தன்னை துப்பாக்கியால் சுட்ட எம்.ஜி.ஆர்.ராதாவைக்கூட, “என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்களே” என்று தான் கேட்டார் என்ற பண்பு நலனும் வியப்புக்கு உரியதாக அமைகிறது. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது நிறைய ரத்த இழப்பு நேரிட்டு, பலரது ரத்தமும் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்ததைத் தொடர்ந்துதான் மேடைகளில் ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என அழைக்க ஆரம்பித்தார் என்பது உள்ளிட்ட தகவல்களுக்கு பஞ்சம் இல்லை.
நல்ல படங்களுடன் நேர்த்தியான தயாரிப்பாக வந்துள்ள இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆரைப் பற்றிய வரலாற்றுப் பெட்டகமாக திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818