நாட்டுக்கொரு பாட்டு
நாட்டுக்கொரு பாட்டு, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, தி இந்து தமிழ், விலை 170ரூ.
உலக நாடுகளின் தேசிய கீதம் உருவான விதம் பற்றி தி இந்து தமிழ் நாளிதழின் மாயாபஜார் இணைப்பிதழில் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
43 பிரபல நாடுகளின் தேசிய கீதம் குறித்து பலரும் அறிந்திராத விஷயங்கள் சுவைபட திரட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு வித தகவல்களை நூலாசிரியர் பதிந்திருப்பதும், பாடலை தமிழாக்கம் செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
குறிப்பாக பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்க்கை குறிப்பு, பாடல்கள் உருவான சூழல், தேசிய கீதத்தை உருவாக்குவதற்கு நாடுகள் மேற்கொண்ட விடா முயற்சிகள், இலங்கை தேசியகீதத்தில் ரவீந்திரநாத் தாகூரின் கைவண்ணம், சினிமா பாடலில் இருந்து உருவான சீன தேசிய கீதம், இனிமை நிறைந்த நேபாள நாட்டு தேசிய கீதம் என ஏராள ருசிகர விஷயங்களை தொகுத்து இருக்கிறார். தேசிய கீதம் மட்டுமன்றி உலக நாடுகளைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் பயன் அளிக்கும் நூல்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818