நான்காம் சுவர்
நான்காம் சுவர், பாக்யம் சங்கர், யாவரும் பதிப்பகம், விலை 375ரூ.
சொற்களைக் கடந்த வாழ்வு
வட சென்னை மக்களின் வாழ்க்கையை ஆழமாக நான்காம் சுவர் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பாக்கியம் சங்கர். நல்ல குணாம்சம் கொண்டவர்கள் மட்டும்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்களா அல்லது நல்ல குணாம்சங்களுடன் மட்டும்தான் நாம் வாழ்கிறோமா என்ன? என்கிற கேள்விகளை இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன.
இளைய ராகங்கள் கட்டுரையில், ஒரு வேனில் ஒலிப்பெருக்கி சகிதம் அமர்ந்துகொண்டு பாடும் பார்வையற்றவர்களின் வாழ்க்கை அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. மழுங்கிய விரலில் எவர்சில்வர் தூக்குச் சட்டியை மாட்டியிருப்பவர்கள் என்று தொழுநோயாளிகளைப் பற்றிய வார்த்தைச் சித்திரம் தீட்டும்போது சொற்களைக் கடந்த வாழ்வின் நிழல் நம் மனசுக்குள் படர்வதை உணர முடிகிறது.
-மானா பாஸ்கரன்
நன்றி: தமிழ் இந்து,18/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818