நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம், முகில், விகடன் பிரசுரம்,  பக்.493, விலை ரூ.250.

வாழ்கின்ற மக்களுக்கு வாழ்கிற சாதனையாளர்களே பாடமாக அமைகிறார்கள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.

உலகின் அதிவேக மனிதர் உசைன்போல்ட் முதல் டிஸ்கவரி சேனலில் காடுகளில் வழிகண்டறிந்து சாகசம் நிகழ்த்தும் பியர் கிரில்ஸ் வரை நிஜவாழ்வின் கதாநாயகர்களை நம்முன் நிறுத்தி, அவர்களைப் போல நம்மையும் நனவுலக நாயகராக்கும் முயற்சியை நூலாசிரியர் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட உசைன் போல்ட் தடகளத்தின் சரித்திரமானதையும், நடுத்தர வர்க்கத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் தேசத்தை பாட்மின்டனில் தலை நிமிரச் செய்த சாய்னாநேவாலையும், தந்தையின் உதவியாலும் சளைக்காத போராட்டத்தாலும் சாதித்த மகேந்திரசிங் தோனி,

உணவுக் கூடத்தில் கூட தலைகாட்டிய அரசியலை வெற்றி கொண்டு சாதனையை மட்டுமே தனக்கானதாக்கிய சமையல் கலைஞர் கோர்ட்டன் ராம்úஸ என நூலெங்கும் நம்மை வியக்க வைக்கும் மனிதர்கள் ஏராளம்.

கை, கால்கள் இல்லாமல் பிறந்தும் ஆஸ்திரேலிய நிக் வ்யுஜிஸிக் தனது விடாமுயற்சியால் தன்னம்பிக்கையின் மறு வடிவமாக புகழ்பெற்றதை படிக்கும்போது நம்மை அறியாமலே மனது சாதிக்கத் துடிக்கிறது.

ஆண்கள் மட்டுமல்ல, கூச்ச சுபாவத்துடன் பிறந்து திடீரென தனது நடனத்தால் உலகையே நிமிர்ந்து பார்க்க வைத்த பியான்úஸ நோல்ûஸயும், தீவிரவாதிகளின் தாக்குதலையும் பொருள்படுத்தாமல் சாதித்துவரும் மலேலா, பெண் புகைப்படக்கலைஞர் லின்சே அடாரியோ ஆகியோர் குறித்த தகவல்கள் திரில் படம் பார்ப்பதைப் போலவே நம்மை வியக்க வைக்கின்றன.

சாதனையாளர்களின் அனுபவ உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்று, சாதனை புரியும் நம்பிக்கையை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது.

நன்றி: தினமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *