நவீன தாமிரபரணி மஹாத்மியம்
நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ.
தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் முகப்பிலும், கியூ ஆர் கோடு அச்சிட்டு அதன் மூலம் தாமிரபரணி வரலாற்றை வீடியோவாகப் பார்க்க ஏற்பாடு செய்து இருப்பது புதுமையான முயற்சி.
நன்றி: தினத்தந்தி, 21/11/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818