நீலகேசி
நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ.
நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது!
சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது.
சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் கடல் ஓரங்களில் கடற்கொள்ளையர் அடிக்கடி புகுந்து கொள்ளையிட்டுத் துன்பத்தை விளைவித்து வந்தனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
சரித்திரத்தில் உண்மையில் ஜீவித்திருந்தவர்களோடு, கற்பனைப் பாத்திரங்களையும் சேர்த்து இந்த உன்னத சரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார் கயல் பரதவன்! படித்து மகிழுங்கள்!
– எஸ்.குரு
நன்றி: தினமலர், 25/6/2017.