நீலத்தங்கம்
நீலத்தங்கம்: தனியார்மயமும், நீர் வணிகமும், இரா.முருகவேள், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.70
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர் எப்படி உலகம் முழுக்கச் சந்தைப் பொருளானது என்பதை இரா.முருகவேளின் ‘நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்’ நுட்பமாக விவரிக்கிறது. டெல்லியில் தனியார்மயத்திடமிருந்து குடிநீரைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் அரசியலை மெச்சும் அதேவேளையில், அதற்குப் பின்னிருக்கும் சித்தாந்தச் சிக்கல்களையும் விவரிக்கிறது.
நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார். குடிநகர்த்துதலுக்குப் பின் இருக்கும் பல்வேறு காரணங்களில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தண்ணீர் பருகுவது மனிதர்களின் அடிப்படைத் தேவை எனில், அதைக் காப்பதும் அவர்களின் கடமை. ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய விழிப்புணர்வும், அரசு செய்ய வேண்டிய அல்லது அரசிடமிருந்து மக்கள் கோர வேண்டிய விஷயங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது ‘நீலத்தங்கம்’.
– கிருஷ்ணமூர்த்தி
நன்றி: தமிழ் இந்து, 12/10/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818