நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?
நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்? டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ.
நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு.
-மணிகண்டன்.
நன்றி: குமுதம், 29/6/2016.
—-
ஒரு டீ சொல்லுங்கள்(இரண்டாம் குவளை), கவின், இடையன் இடைச்சி நூலகம், பக். 128, விலை 100ரூ.
உண்மையைப் போட்டு உடைக்கும் என்பது சென்ரியூ கவிதைகளின் தகுதி என்பதற்கு கவின் கவிதைகளே சாட்சி. யதார்த்தத்திற்கு அருகில் நின்று பேசும் கவிதைகள் இந்தத் தொகுப்பில் அதிகம் என்பது கூடுதல் சிறப்பு
(உ-ம்)
மன்னிக்கவும் எழுத்தாளர்
உன் எழுத்துக்களே உன்
அசல் முகமென
நம்புவதற்கு வேறு ஜாகை பார்.
-மணிகண்டன்.
நன்றி: குமுதம், 29/6/2016.