நிழல்களின் உரையாடல்
நிழல்களின் உரையாடல், மார்த்தா த்ராபா, தமிழில் அமரந்தா, காலக்குறி & யாழ் பதிப்பகம்.
ஒடுக்குமுறையும் எதிர்ப்பரசியலும்
அர்ஜென்டினாவில் மிகக் கொடுமையான அரசு வன்முறையைத் தொடர்ந்து முப்பதாயிரம் இளைஞர்கள் ‘காணாமல் போனார்கள்’. அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும்பொருட்டு தாய்மார்கள், மனைவி மக்கள், சொந்தபந்தங்கள் என வெவ்வேறு வயதைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இதை மையப்படுத்தி வெளியான த்ராபாவின் நாவல், அமரந்தாவின் அற்புதமான மொழிபெயர்ப்பில் 1997?ல் வெளியாகியது. இப்போது காலத்தேவை கருதி மீண்டும் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள்.
அரசு வன்முறையையும், எதிர்ப்பரசியலின் வலிமையையும் நுட்பமாக வெளிப்படுத்தும் நாவல் இது.
நன்றி: தி இந்து,8/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818