பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு

பாயும் தமிழகம் – தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு, சுசிலா ரவீந்திரநாத், தமிழில்: எஸ்.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக்.408, விலை ரூ.400.

தமிழகத் தொழில்துறை வளர்ச்சியை விவரிக்கும் ஆவணமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.

தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழில்நிறுவனங்களான முருகப்பா குழுமம், டிவிஎஸ் குழுமம், அமால்கமேஷன்ஸ் குழுமம், எம்ஆர்ஃஎப், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொடக்கம், வளர்ச்சி, அவற்றின் இன்றைய நிலை வரை இந்நூல் விவரிக்கிறது.

தொழிலைத் தொடங்கியவர்களின் பின்புலம், அதற்காக தொழில்முனைவோர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூறப்பட்டுள்ளன. அதற்குப் பின்பு ஸ்ரீராம் குழுமம், அப்பல்லோ மருத்துவமனை, சிஃபி, சன் டிவி உட்பட பல நிறுவனங்களின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்துறையில் தடம் பதித்திருக்கும் டிசிஎஸ், காக்னிஸன்ட், பிற நிறுவனங்களான போலாரிஸ், ராம்கோ சிமெண்ட்ஸ், மாஃபா, பாரத் மேட்ரிமோனி, காம்ஸ் ஆகியவற்றின் வளர்ச்சியைப் பற்றியும் சுவையான பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர் உட்பட தமிழ்நாட்டின் தொழில் மண்டலங்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வளர்ச்சி பற்றி மட்டுமல்லாமல், நலிவுற்ற தொழில்கள் பற்றியும் அதற்கான காரணங்களையும் நூல் அலசி ஆராய்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழகம் இதுவரை செய்ததென்ன? செய்ய வேண்டியவை எவை என்பது பற்றிய ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளன.

தமிழகத் தொழில்துறை வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய அரிய நூல்.

நன்றி: தினமணி, 30/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *