பையன் கதைகள்
பையன் கதைகள், மலையாளம் வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்திய அகாதெமி, விலை 365ரூ.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூல். இதில் 73 கதைகள் இடம் பெற்றள்ளன. ஒளி வீசும் கண்கள் படைத்த பையன், எண்ணெய் மின்னும் முகத்தில் எப்போதும் ஒரு தியாகியின் பாவம், ஒவ்வொரு நிமிடமும் அவசியமின்றி மரணிப்பது போலவும், எத்தனை முறை மரணித்தாலும் அதைப் புரிந்துகொள்ள முடியாது போலவும் ஒரு பாவனை, கற்பனையில் ஓர் இரும்புச் சிலுவையை தூக்கி சுமப்பது போன்ற உணர்ச்சி வெளிப்பாடு, இவர்தான் பையன்.
பையனுக்கும், பையன் கதைகளுக்கும் மலையாள மண்ணில் தனியோர் இடமுண்டு. மலையாள இலக்கியத்தில் ‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ என்று போற்றப்படும் வி.கெ.என். இக்கதைகளில் இலக்கியம் – வெளியுறவு – அரசியல் ஆகிய துறைகளில் ஊடுருவியுள்ள குற்றம் குறைகளை அங்கதச் சுவை மிளிர, அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். மலையாத்திலிருந்து எளிமையான தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மா. கலைச்செல்வன்.
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.