பரீட்சைக்குப் பயமேன்
பரீட்சைக்குப் பயமேன், நரேந்திர மோடி, தமிழாக்கம் வெ.இன்சுவை, அல்லயன்ஸ், விலை 150ரூ.
தேர்வு என்னும் பண்டிகையில் பங்கேற்கும் வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன், ‘மன்கீபாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் அளித்த சிறந்த விஷயங்களின் தொகுப்பாகும்.
மாணவ – மாணவியருடன் நேரிடையாக உரையாடும் வகையில் அமைந்த இக்கருத்துக்கள், 25 தலைப்புகளில், அதுவும், ‘மந்திரம்’ என்ற வகையில் தரப் பட்டிருக்கிறது.
எப்போது பார்த்தாலும் படிப்பதை சற்று நிறுத்தி, ஓய்வுக்கு பின் படிக்கலாம் என்பது அதில் ஒன்று. உலகம் முழுவதும், ‘யோகா’ பரப்பிய பிரதமர் என்பதால், அத்தலைப்பில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சிறப்பானவை.
பெற்றோர், ஆசிரியர், மாணவ – மாணவியர் அனைவருக்கும் பயன் தரும் புத்தகம். அழகான வழுவழுத்தாளில் வண்ண அச்சும், படங்களும் மாணவர்களை நிச்சயம் ஈர்க்கும்.
நன்றி: தினமலர், 16/12/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027642.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818