பாதை எங்கும் பாடங்கள்
பாதை எங்கும் பாடங்கள், பேராசிரியர் க. ராமச்சந்திரன், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ.
தினத்தந்தி இளைஞர் மலரில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு.
வாழ்க்கை ஒரு பயணம். அந்தப் பயணத்தில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். வெற்றியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
“கற்றுக்கொள்ள பாதை எங்கும் பாடங்கள் உள்ளன” என்று கூறும் ஆசிரியர், “நதியின் ஒட்டமாய் உன் பயணம் இருக்கட்டும்.
“எந்த நதியும் தன் பயணத்தில் திரும்பி வர நினைப்பதில்லை. நதிக்கு இளைப்பாறுதல் இல்லை” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். அவர்கள் முன்னேற நல்வழி காட்டுகிறார்.
நன்றி: தினத்தந்தி, 17/8/2016.