பயங்கரவாதி என புனையப்பட்டேன்
பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, பக். 240, விலை 200ரூ.
கடந்த, 1998ல் கடத்தப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்பட்டு, 24 குண்டு வெடிப்புகள் தொடர்பாக, 19 வழக்குகளில் சேர்க்கப்பட்டவர், ஆமிர் கான்.
14 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின், தன்னை குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, விடுதலையாகிறான். தந்தையை இழந்து, தாயை நோயாளியாக பார்க்கும் அவனை, சமூகம் எப்படி நடத்துகிறது என்பது தான், இந்நூல்.
இது, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் தப்பித்தல், தப்ப வைத்தல், தப்பு செய்தல் என்னும் முடிச்சுகளை நேரடியாக அவிழ்க்கிறது.
நன்றி: தினமலர், 16/1/2017.