சொற்களின் மீது எனது நிழல்
சொற்களின் மீது எனது நிழல், சைலபதி, நிவேதிதா பதிப்பகம், பக். 160, விலை 120ரூ.
‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை.
மகளின் படிப்பை கனவு காணும் தந்தை, சிறு வயதில் வாழ்க்கை இழக்கும் பெண், முதுமையால் நிராகரிக்கப்படும் முதியவர் என, இக்கதையில் வருவோர் எல்லாரும், நமக்கு நெருக்கமானவர்களாகவே உள்ளனர்.
நடுத்தர மனிதர்களின் கனவுகளை, எளிமையாய் யதார்த்த பின்னணியில் இந்நூல் விளக்குகிறது. சைலபதியின் கதைகள், இனிமையாக துவங்கி, அதிர்ச்சியாகவே முடிவடைகின்றன.
நன்றி: தினமலர், 16/1/2017.