பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி பா. ஜோதி நிர்மலாசாமி,விஜயா பதிப்பகம், விலை 145ரூ.

“பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என்று பாடினார், மகாகவி பாரதியார் அன்று. அத்தகைய பெண்ணின் பெருமையைப் பற்றி நேர்மையும், எளிமையும், எளியவர்பால் அன்பும்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.ஜோதி நிர்மலாசாமி எழுதிய புத்தகம்தான் “பெண்மை ஒரு வரம்”.

பெண்ணின் குணநலன்கள், இந்த சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் போன்ற அனைத்தையும் தன்னையும், தன் குடும்பத்தையும் மையமாக வைத்தே எழுதியிருக்கிறார். பணி காலத்திலும், தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு பெண் என்ற முறையில் அவர் சந்தித்த பல நிகழ்வுகள் நிச்சயமாக பெண்மையின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது.

“மாமியார் கொடுமையைப் பற்றி சமுதாயம் சாடும்போது மாமியாராய் அல்ல, மறுதாயாய் அறிவோம்” என்று கூறியிருப்பது நெஞ்சை தொடுகிறது. மொத்தத்தில் பெண்ணின் சிறப்பைப் பற்றி முழுமையாக தெரிய வேண்டுமென்றால், இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Leave a Reply

Your email address will not be published.