பிம்பச் சிறை
பிம்பச் சிறை, பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை பதிப்பகம், விலை 225ரூ
எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூல்
தமிழ்நாட்டில் முதலில் சினிமாவிலும், பிறகு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் எழுதிய நூல், இப்போது தமிழில் “பிம்பச் சிறை” எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும், அரசியலிலும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
தமிழில் மொழி பெயர்த்தவர் பூ.கொ. சரவணன். திரை உலகில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றியை விரவாகக் கூறும் பாண்டியன், அவருடைய 11 ஆண்டு கால ஆட்சியை “இருண்ட காலம்” என்று கூறுகிறார்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பாண்டியனை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்த நினைப்பார்கள் என்பது நிச்சயம். ஆனால் அது சாத்தியம் இல்லை. ஏனென்றால், பாண்டியன் இப்போது உயிரோடு இல்லை.
நன்றி: தினத்தந்தி, 27/6/2016.