பிற்காலச் சோழர் சரித்திரம்
பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், விலை 570ரூ.
தமிழகத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்து 13-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி வரை சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து சோழ மன்னர்கள் ஆட்சி செய்த முழுமையான வரலாறு, இந்த நூல் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சோழ மன்னர்கள் ஒவ்வொருவரும் எந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தனர், அவர்கள் ஆட்சி முறை, குடவோலை மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம், நிலங்களை அளக்க எடுக்க நடவடிக்கைகள், நீர்ப்பாசன திட்டங்கள், அப்போது நடைபெற்ற போர்கள் மற்றும் மக்களுக்காக அந்த மன்னர்கள் ஆற்றிய பணிகள் ஆகிய அனைத்தும் மிக விரிவாக எழுதப்பட்டு இருக்கிறது.
இவை தவிர ஒவ்வொரு மன்னரின் மெய்க்கீர்த்தி, அந்த மன்னர்கள் பற்றிய பழங்காலப் பாடல்கள், முக்கியமான கல்வெட்டு விவரங்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சோழர்கள் ஆட்சியின்போது பொதுமக்களும் சமூக வாழ்க்கையும் எவ்வாறு இருந்தன, வாணிகம் மற்றும் கைத்தொழில்கள் எவ்வாறு நடைபெற்றன, அந்தக் காலத்தில் இருந்த முக்கிய அதிகாரிகள் யார் – யார் என்பது பற்றிய விவரமும் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன.
சோழ மன்னர்கள் பற்றிய முழுமையான ஆவணமாகத் திகழும் இந்த நூல், வரலாற்று ஆர்வலர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் படித்து அறிந்து கொள்ள வேண்டியதாகும்.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818