ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல்
ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல், இரா.சர்மிளா, காவ்யா, விலை 120ரூ.
நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்பதையும், அந்த செல்களில், ‘குருத்தணு’ எனப்படும் ஸ்டெம் செல்களின் சிறப்புகளையும் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் தந்து இருப்பதைப் பாராட்டலாம்.
ஸ்டெம் செல்கள் என்றால் என்ன? அவை நமது உடலில் ஆற்றும் பணிகள், ஸ்டெம் செல்களை சேமித்து வைத்து அதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது எவ்வாறு? ஸ்டெம் செல் வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது போன்ற பல வினாக்களுக்கு பயனுள்ள பதில்கள் இதில் அடங்கியுள்ளன.
ஸ்டெம் செல் உருவாகும் தொப்புள் கொடியின் ஒரு பகுதியை பதப்படுத்தி அதை தாயத்துக்குள் வைத்து கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அணிந்து கொள்வது ஏன் என்பதற்கு ஆசிரியர் தந்து இருக்கும் விளக்கம் வியப்பளிக்கிறது.
நன்றி: தினத்தந்தி 3/7/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818