பொருநை நதிக்கரையினிலே
பொருநை நதிக்கரையினிலே, கன்யூட்ராஜ், என்சிபிஹெச், விலை 230ரூ.
இருபுறக் கரைகளிலும் தண்ணீர் புரண்டோடிய ஆறுகள், இன்று வெறும் மணல்வெளியாய் அனல் பரப்பிக் கிடக்கின்றன. பயிர் செழிக்க உதவிய ஆற்றுநீர்ப் பாசனம், விவசாயிகளின் ஒட்டிய வயிறாய் சுருங்கிவிட்டது.
நதிகளில் ஓடும் ஆற்று நீர் எவ்வளவு அவசியமானதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, அற்றுமணலும், பன்னாட்டுக் கம்பெனிகள் ஒருபுறம் நதிநீரை உறிஞ்சிக் குடிக்க, இன்னொருபுறம் ஆற்று மணலை அள்ளிப்போய் கொள்ளையடிக்கிறார்கள் பெருமுதலாளிகள். இயற்கை வளத்தைச் சூறையாடிவருபவர்களுக்கு எதிராகப் போராடும் கிராம மக்களின் போராட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.
நன்றி: தி இந்து, 3/2/2018.