புகழ்பெற்ற கடற் போர்கள்

புகழ்பெற்ற கடற் போர்கள், வி.என். சாமி, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.600

முழுக்க முழுக்கக் கடற்போர் பற்றியே குறிப்பிடுகிறது இந்த நுால். கடற்படையின் தோற்றம், போர்க்கப்பலின் கட்டுமானம், போர்க்கப்பலின் வகைகள், அதை உருவாக்கியவர்கள் பற்றிய செய்திகளை கடின உழைப்பால் சேகரித்துள்ளார்.

உலக வரலாற்றில் நிகழ்ந்த கடற்போர்கள், தளபதிகள் குறித்த தகவல்களும் அமைந்து உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட உலகப்போர்களைப் பற்றியும், அவற்றின் பின்னணி பற்றியும் விளக்கிச் சொல்கிறார்.

ரோம சாம்ராஜ்யம் புகழ் பெறக் காரணம் அந்நாட்டில் வலிமை வாய்ந்த கடற்படையே என்கிறார். உலகின் முதல் கடற்படை தளபதி பற்றிய குறிப்பு, வலிமையான கடற்படை இன்மையால் நெப்போலியன் அடைந்த தோல்வி; ருஷ்யா, சீனா, அமெரிக்க நாடுகளில் கடற்படை பற்றிய விபரம் உள்ளது.

இந்தியக் கடற்படையின் தன்மை, அவுரங்கசீப் கடற்படையில் காட்டிய ஆர்வம், கடற்போர் தந்திரங்கள், கடற்கொள்ளையர்கள், தமிழக வரலாற்றில் சங்க இலக்கிய வழிகாட்டுதல் போன்றவற்றை எளிய மொழிநடையில் விவரித்துள்ளார். செய்திகள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சொல்லப்பட்டுள்ளன. ஆசிரியரின் கடின முயற்சி பாராட்டத்தக்கது.

-– ராம.குருநாதன்

நன்றி: தினமலர், 6/12/20

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030796_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *