புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், விலை 105ரூ.
தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் 42 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் மகத்தான சிறுகதைகளை எழுதி மங்காப் புகழ் பெற்றார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான இந்தப் புத்தகம் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது….
பிறந்தது முதல் புதுமைப்பித்தன் சந்தித்த சவால்கள், வேதனைகள், அவரது கதைகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகிய அனைத்தும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டு இருக்கின்றன. கபாலி, நந்தி, சுக்கிராச்சாரி, கூத்தன் போன்ற பல புனை பெயர்களில் புதுமைப்பித்தன் பல கட்டுரைகள், பாடல்கள், சினிமா வசனங்கள் ஆகியவற்றையும் எழுதினார் என்ற தகவலையும் தரும் இந்த நூல், புதுமைப்பித்தன் நோய்வாய்ப்பட்டு இருந்த போது மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதங்களின் சில பகுதிகளையும் தந்து இருப்பது புதுமைப்பித்தன் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவுகிறது.
நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818