மாலை பூண்ட மலர்

மாலை பூண்ட மலர், கி.வா.ஜகந்நாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், பக். 184, விலை 115ரூ. அபிராபி அந்தாதியில் முதல், 25 பாடல்களுக்கு எழில் உதயம் எனும் பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்து நுாலாக வெளியிட்ட நுாலாசிரியர், ‘சங்கரகிருபா’ என்ற மாத இதழில், 26 முதல், 50 வரையிலான பாடல்களுக்கு விளக்கக் கட்டுரைகளை எழுதி, ‘மாலை பூண்ட மலர்’ என்ற பெயரில் இரண்டாம் தொகுதியை, 1970களில் வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பே தற்போது மறு அச்சு வடிவம் பெற்றுள்ளது. ‘ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’ இவ்வாறு மும்மூர்த்திகளும் […]

Read more

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், விலை 105ரூ. தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் 42 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் மகத்தான சிறுகதைகளை எழுதி மங்காப் புகழ் பெற்றார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான இந்தப் புத்தகம் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது…. பிறந்தது முதல் புதுமைப்பித்தன் சந்தித்த சவால்கள், வேதனைகள், அவரது கதைகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகிய அனைத்தும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டு இருக்கின்றன. கபாலி, நந்தி, சுக்கிராச்சாரி, கூத்தன் போன்ற […]

Read more