இராகவம் தொகுதி 2

இராகவம் தொகுதி 2, தொகுப்பும் பதிப்பும் கா.அய்யப்பன், காவ்யா வெளியீடு, விலை 900ரூ.

உவேசா வழித்தடத்தில்

நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார்.

‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் கா.அய்யப்பன். இரண்டாம் பதிப்புகளில் இடம்பெற்ற சேர்க்கைகளைக் கவனமாகத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள், உவேசா வழித்தடத்தில் பின்தொடர்ச்சி இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

– அரசன்

நன்றி: தமிழ் இந்து,16/3/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *