சலூன்
சலூன், க.வீரபாண்டியன், யாவரும் பதிப்பகம், விலை 140ரூ.
முடி திருத்துவதற்காக வெளிநாடொன்றில் கடை தேடி அலைவதில் தொடங்கி பால்ய காலத்தில் சந்தித்த நாவிதர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதாக அமைந்திருக்கிறது க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல். நான்கு வேறு வேறு இடங்களில் நாயகனுக்கு அறிமுகமான நாவிதர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை, முடி திருத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிபுணத்துவம், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என விவரித்துச் செல்கிறது.
நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் பெரும் வியாபாரமாகிப்போன மாடர்ன் சலூன்களுக்கும், வாழ்க்கைப்பாட்டுக்காகத் தொழில் செய்பவர்களுக்கும் இடையேயான போட்டியும், சமூகக் கண்ணோட்டங்களும் நாவலில் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. வாசிப்பின் முடிவில், நாவிதர்கள் குறித்த வாசகரின் எண்ணங்கள் திருத்திக்கொள்ளப்படும் என்பது இந்நாவலின் வெற்றி.
நன்றி: தமிழ் இந்து,16/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818