ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!,
ராமானுஜர் மற்றும் வைணவச் சமயச் சான்றோர்கள்!, கா.சே. மணவாளன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 206, விலை 160ரூ.
சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நாம் நன்கு வாழ நம் வாழ்க்கையை மாண்பு உடையதாக செய்து கொள்ள பெரிதும் உதவும். ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள், தியாக சீலர் கூரேசர், முதலியாண்டான் எம்பாரும், ராமாநுசமும், பட்டரும்,ந ச்சீயரும், நஞ்சீயரும் நம்பிள்ளையும் போன்ற தலைப்புகளில் ராமானுஜர் மற்றும் வைணவ சமய சான்றோர் பற்றி பக்தி மணம் கமழ சொல்லி சொல்கிறார் மணவாளன்.
ஆசாரியர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு இன்னும் வரிகாட்டியாக அமையும் என்பதனாலேயே இச்சிறு நூலை எழுத துணிந்தேன். எல்லா ஆசாரியர்களை பற்றியோ அவர்களின் எல்லா வாழ்க்கை அனுபவங்களையோ இச்சிறு நூலில் கூற முடியவில்லை. பிறவற்றை அறிய, இந்நூல் ருசியை உண்டாக்க வேண்டுமென்பது அறிய, இந்நூல் ‘ருசியை உண்டாக்க மணவாளன் அடியேன் அவா’ என்கிறார் ஆசிரியர் மணவாளன்.
-எஸ். குரு.
நன்றி: தினமலர், 6/8/2017.