சகலகலா வல்லபன்

சகலகலா வல்லபன், அருள்செல்வன், அபு மீடியாஸ், விலை 180ரூ.

மீன்கொடி தேர்வலம்

கவிஞர், பாடலாசிரியர், திரை இயக்குநர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் வாய்ந்த எம்.ஜி.வல்லபனைப் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது சிஷ்யர் அருள்செல்வன் அவரை நினைவுகூறும் விதமாக கொண்டுவந்துள்ள இத்தொகுப்பில் எம்.ஜி.வல்லபனைப் பற்றிய முழு பரிமாணமும் வாசகர்களுக்குத் தெரியவருகிறது.

தமிழ் பத்திரிகை உலகில் இன்றைக்கு மருத்துவம்,  சினிமா, ஜோதிடம், விளையாட்டு என்று தனித்தனியே நிறைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ‘பிலிமாலயா’ என்கிற ஒரே நிறுவனத்திலிருந்து வெவ்வேறு வடிவ நேர்த்தியுடன் வெவ்வேறு இதழ்களை இப்படி முதன்முதலில் கொண்டுவந்தவர் எம்.ஜி.வல்லபன் என்கிற செய்தி ஆச்சரியமூட்டுகிறது.

‘தைப் பொங்கல்’ என்ற படத்தை இயக்கியவர். ‘மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகிறான்’ என்ற பாடலை எழுதியவர். மதர் லேண்ட் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அனைத்துப் படங்களின் கதைகளையும் கேட்டுத் திர்மானித்தவர் என்று அவரைப் பற்றிய செய்திகள் ருசிகரமானவை. நடிகர் சிவக்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, பொன்வண்ணன், ஆர்.செல்வராஜ், கே.ரங்கராஜ் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் எம்.ஜி.வல்லபனைக் கொண்டாடியிருக்கிறார்கள் இப்புத்தகத்தில்.

-மானா.

நன்றி: தி இந்து, 28/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *